கூட்டத்திலே யார் தான் பாடல் வரிகள்

Movie Name
Deiva Magan (1969) (தெய்வ மகன்)
Music
M. S. Viswanathan
Year
1969
Singers
Lyrics
Kannadasan
கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
ஹைய்யா....

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா...

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
காட்டுப் பூவை கிள்ளி கிள்ளி கனிய வைப்பாரோ
காட்டுப் பூவை கிள்ளி கிள்ளி கனிய வைப்பாரோ
கண்ணாடி பார்த்துக் கொண்டே காதல் செய்வாரோ 
காதல் செய்வாரோ போதை கொள்வாரோ

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ

செக்கச் சிவந்திருக்கும் செவ்வாழை பந்தலிலே
சித்தாடை மூடி வைத்த பல்லாக்கிலே
ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா
ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா
பூப்பந்து கை கொண்டு நீ வந்து ஆட
பொன் வாங்க நாள் பார்த்ததோ
பூப்பந்து கை கொண்டு நீ வந்து ஆட
பொன்னான நாள் பார்த்ததோ
பாலாடை மின்ன என் மேலாடை பின்ன
வாவென்று நான் கேட்பதோ
வாவென்று நான் கேட்பதோ

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ

கள்ளுண்ட பொன் வண்டு தள்ளாடும் போது
கண்கொண்டு நீ காண பொன் வேண்டுமோ
ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா
ஹல்லல்ல ஹல்லல்ல ஹல்லல்லல்லல்லா
முன்னாலும் பின்னாலும் முந்நூறு வண்ணம்
எவ்வண்ணம் உன் எண்ணமோ
முன்னாலும் பின்னாலும் முந்நூறு வண்ணம்
எவ்வண்ணம் உன் எண்ணமோ
மெய் வண்ணம் கண்டு உன் கை வண்ணம் காட்டு
கண் வண்ணம் பொய் சொல்லுமோ
கண் வண்ணம் பொய் சொல்லுமோ

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா ஸ்ஸா...

கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ
என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.