காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் பாடல் வரிகள்

Last Updated: Jun 01, 2023

Movie Name
Deiva Magan (1969) (தெய்வ மகன்)
Music
M. S. Viswanathan
Year
1969
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே... ஏ...

வைரம் போலும் நட்சத்திரங்கள்
வாரி வைத்த கன்னம் ரெண்டும்
கண்ணாடி போலாடுது

வட்டம் போடும் மொட்டுப் பூவை
திட்டம் போட்டு தொட்டுப் பார்த்தால்
ஏனென்று யார் கேட்பது

உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

வெட்கம் அங்கே வேகம் இங்கே
கட்டிக் கொண்டால் அச்சம் எங்கே
அறியாத முகமா இது

எங்கே எந்தன் நெஞ்சம் உண்டோ
அங்கே உந்தன் மஞ்சம் உண்டு
கனியாத உறவா இது

உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்
என் அழகினிலே என் விழிகளிலே

காதலிக்க சொல்லும் வண்ணங்கள்
உன் மலர்களிலே பொன் இதழ்களிலே

ஓலலே ஓலலே ஓலலே ஓலலே ஓலலே.... 
ஓலலே ஓலலே ஓலலே ஓலலே ஓலலே....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.