காலமெல்லாம் என் வாழ்வில் பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Kalyani (1952) (கல்யாணி)
Music
G. Ramanathan
Year
1952
Singers
P. Leela
Lyrics
Kannadasan

காலமெல்லாம் என் வாழ்வில் துன்பந்தானா
கண்ணீரும் ஏக்கமும் என் உடன் பிறப்பா
பாழ்பட்ட வாழ்க்கை இனி சீர்படாதா
பாவியிலும் படுபாவி ஏன் பிறந்தேன்.....

நாடுவேனோ சீரான வாழ்வென்
வாழ் நாளிலே நானே
நாடோடி போலானேன் என்றும்
சாகாத பிணமானேன்

தாயிழந்தேன் தந்தை அன்பிழந்தேன்
மாலையிட்ட மணவாளன் துணையிழந்தேன்
இரக்கமில்லா உலகத்தில்
ஏன் இன்னும் வாழுகின்றேன்...

தீராத சோகத் திசை மீதில் நானே
தேய்ந்து போனேன் திகைத்தே நிற்கின்றேன்
நாதன் அன்பே நான் காணுவேனோ
மாசில்லாத மாபாவி நானே......ஆ....(நாடுவேனோ)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.