Kaadhal Aiyaiyo Kaadhal Lyrics
காதல் அய்யோ காதல் பாடல் வரிகள்
காதல் அய்யோ காதல் ஐயையோ காதல்
கமலாவைக் கண்டது முதல்
வந்ததே எனக்கும் அந்தக் காதல்
அய்யோ காதல் ஐயையோ காதல்....
காலேஜூப் பெண்களுக்கு கடற்கரையிலே
பட்டிக்காட்டிலிருக்கும் பெண்களுக்கு கொளக்கரையிலே
அவளுக்கும் எனக்கும் அது அடுப்பங்கரையிலே
அடிக்கடி வர்றதுங்க ஆளையே உருக்குதுங்க (காதல்)
கன்னிப் பெண்ணைக் கண்டா அது
கரண்டு போல பாயுங்க
கால நேரமில்லே அதுக்கு கன்ட்ரோலுமில்லீங்க
ஒரு வயசு ஜாதி கீதி ஒண்ணும் பார்ப்பதில்லீங்க
உத்தரவில்லாமல் அது ஓடியே வருதுங்க (காதல்)
நாடகத்தப் பாக்கப்போனா நடுநடுவே லவ்வுங்க
சினிமாப் படம் பாப்பமுன்னா சீனுக்கு சீன லவ்வுங்க
தெரு வழியே போயி பாத்தா கடக்கி கட லவ்வுங்க
ஆத்துலேயும் லவ்வுங்க கொளத்துலேயும் லவ்வுங்க
அடுத்த வீட்டுல லவ்வுங்க எதுத்த வீட்டுல லவ்வுங்க
அங்குமிங்கும் கணக்கில்லாம எங்கும் நெறஞ்சிருக்கும்
லவ்வு........லவ்வு......லவ்வு......லவ்வு.......(காதல்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.