எந்தக் காரியமாயினும் பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Kalyani (1952) (கல்யாணி)
Music
G. Ramanathan
Year
1952
Singers
S. C. Krishnan, K. Rani
Lyrics
Kannadasan
எந்தக் காரியமாயினும் உன்னைவிட நான்
கச்சிதமாகச் செய்வேன் கன
கச்சிதமாகச் செய்வேன்
சொல்லப் போனால், எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்தி
சொல்லப் போனால், எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்தி நான் ஒஸ்தி

நிச்சயமாக முடியாதுன்னால்
நிச்சயமாக முடியும் என்னால்
முடியாதுன்னால் முடியும் என்னால்
முடியாதுன்னால் முடியும் என்னால்
முடியாதுன்னால் முடியும் என்னால்
முடியாதுன்னால் முடியும் என்னால்

நான் ஓட்டை வண்டியில் காட்டுப்பாதையில்
ஒண்டியாகச் செல்வேன் நான்
ஒண்டியாகச் செல்வேன்
சொல்லப் போனால், எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்தி
சொல்லப் போனால், எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்தி நான் ஒஸ்தி

நான் பட்டாளத்திலே சேர்ந்து
ஜோரா சண்டைக்குப் போவேனே
நான் பக்கத்து வீட்டுக்காரியோடே
சண்டைக்குப் போவேனே
நான் பட்டாளத்திலே
நான் பட்டாளத்திலே சேர்ந்து
ஜோரா சண்டைக்குப் போவேனே
நான் பக்கத்து வீட்டுக்காரியோடே
சண்டைக்குப் போவேனே
அடுக்கடுக்காக மிக அழகாகப்
பொய் சொல்வேன் நானே
அதிலும் மிக மிக மிக மிக அழகாப்
பொருந்தச் சொல்வேனே
ஓ! அடுக்கடுக்காக மிக அழகாகப்
பொய் சொல்வேன் நானே
அதிலும் மிக மிக மிக மிக அழகாப்
பொருந்தச் சொல்வேனே
சொல்லப் போனால், எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்தி
சொல்லப் போனால், எல்லாத்திலுமே
உன்னை விட நான் ஒஸ்தி நான் ஒஸ்தி

இந்தா நீ பொறுமையோட சப்பாத்தி தின்பியா
என்னாலே முடியாதம்மா என்னாலும் முடியாது!

ஆடைகளெல்லாம் உன்னைக் காட்டிலும்
அழகாய் அணிவேனே நான்
அழகாய் அணிவேனே – எந்த
ஆடைகளை நீ அணிந்தாலும் நான்
அழகாய்த் தெரிவேனே நான்
அழகாய்த் தெரிவேனே
ஓஹோ சட்டையும் வேட்டியும் போட்டா
பாக்க சகிக்காதே அம்மா
அட சூட்டும் கோட்டும் போட்டால் கூட
ஜோராய் இருப்பேன் நான்
சகிக்காது போ! சகிக்கும் போ!

நான்
நான் சங்கீதத்தில் நிபுணன் – ஜோராய்ச்
சத்தம் போட்டுப் பாடுவேன்
நான் சங்கீதத்தில் நிபுணன்
நான் சங்கீதத்தில் நிபுணி – ஜோராய்ச்
சத்தம் போட்டுப் பாடுவேன்
நான் சங்கீதத்தில் நிபுணி
நான் சங்கீதத்தில் நிபுணன்
ஸரிகம பதநிஸ ஸநிதப மகஸரி
சங்கீதத்தில் நிபுணி
ஸரிகா மதமா பதமா கரிஸரி
சங்கீதத்தில் நிபுணன்
ஸரிகா மதநி பதநி பதநி
ஸ ஸ ஸ ஸ ரி ரி ரி ரி
ஸ ஸ ரி ரி ஸ ஸ ரிரி ஸரிகமா
ஸரிகமா

நான் மெல்லப் பாடுவேன்
நான் மெதுவாய்ப் பாடுவேன்
நான் நல்லாப் பாடுவேன்
நயமாப் பாடுவேன்
நான் மெல்லப் பாடுவேன்
நான் மெதுவாய்ப் பாடுவேன்
நான் நல்லாப் பாடுவேன்
நயமாப் பாடுவேன்

இந்திப் பாட்டு லாரலப்பா
சந்தப் பாட்டு ஆசை மச்சான்
ஓ! இந்திப் பாட்டு லாரலப்பா
சந்தப் பாட்டு ஆசை மச்சான்
ஓ! எந்தப் பாட்டாயிருந்தாலும் அதை
மெல்லப் பாடுவேன் நான்
எந்தப் பாட்டாயிருந்தாலும் அதை
மெல்லப் பாடுவேன் நான்
மிக மெதுவாய்ப் பாடுவேன் நான்

முடியாதுன்னால் முடியும் என்னால்
முடியாதுன்னால் முடியும் என்னால்
முடியாதுன்னால் முடியும் என்னால்

நான் காசில்லாமல் நெய்யி வாங்குவேன்
கடுகும் மிளகும் உளுந்து வாங்குவேன்
அரிசி பருப்பு அதுவும் வாங்குவேன்
அத்தனையும் ஓசி வாங்குவேன்
நானும் அத்தனையும் ஓசி வாங்குவேன்

நான் அத்தப் பேத்து இத்துல எழுதி
ஆட்டேத் தூக்கி, குட்டியில் போட்டு
குட்டியேத் தூக்கி ஆட்டுல போட்டு
அம்மா குடுக்கிற சம்பளத்தோட
கிம்பளமெல்லாம் சேத்து நெறைய
சம்பாதிப்பேன் டப்பண்டி அது
உன்னால் முடியுமா செப்பண்டி

அப்படியா?
இந்த அம்மா நடந்து போனாலே போதும்
கவர்மெண்டு அச்சடிச்ச பணமெல்லாம் ஆடும்
இவ சும்மா கழுத்த வெட்டினாப் போதும்
இங்கே சொளைசொளையாப் பணம் வந்து சேரும்
இவ பாத்தாக் காசு சிரிச்சாக் காசு
நின்னாக் காசு நடந்தாக் காசு
இருந்தாக் காசு முடிஞ்சாப் பேசு
உன்னால் முடிஞ்சாப் பேசு .

முடியும் என்னால் முடியாதுன்னால்
முடியும் என்னால் முடியாதுன்னால்
முடியும் என்னால் முடியாதுன்னால்
முடியும் என்னால் முடியாதுன்னால்
முடியும் என்னால் முடியாதுன்னால்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.