வாழ நினைத்தால் வாழலாம் பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Bale Pandiya (1962) (1962) (பலே பாண்டியா)
Music
Viswanathan Ramamoorthy
Year
1962
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம் 
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்

வாழச் சொன்னால் வாழ்கிறேன் 
மனமா இல்லை வாழ்வினில்
ஆழக் கடலில் தோணி போலே 
அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி

துடித்து நிற்கும் இளமை சாட்சி

வாழும் காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்

வாழ நினைப்போம் வாழுவோம் 
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே 
காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைப்போம் வாழுவோம் 
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே 
காலம் முழுதும் நீந்துவோம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.