Onnu Rendu Moonu Lyrics
ஒண்ணு ரெண்டு மூணு பாடல் வரிகள்
Last Updated: Jul 18, 2026
Movie Name
Kalyani (1952) (கல்யாணி)
Music
G. Ramanathan
Year
1952
Singers
K. Jamunarani & group
Lyrics
Kannadasan
ஒண்ணு ரெண்டு மூணு
ஒகடி ரெண்டு மூடு ஒன் டூ த்ரீ.....(ஒண்ணு)
பிரம்மசாரியா இருந்து வாழும்போது ஒண்ணு
பெண்ணைக் கட்டி வாழ்வில் இன்பம் காணும்போது ரெண்டு
பிள்ளை பெற்று கையிலெடுத்துப் போகும்போது மூணு
தாலிலோ தாலேலலோ..... தாலிலோ தாலேலலோ.....(ஒண்ணு)
மனைவியை அன்பாய் நடத்தோணும்
மறு மாதரை நினையாதிருக்கோணும்
நேர்மையாய்ச் செல்வம் தேடோணும்
இதை நிதமும் கணவன் உணரோணும் ஓ..ஓ..(ஒண்ணு)
கணவன் பேச்சைக் கேக்கோணும்
அவன் கருத்தை அறிந்து நடக்கோணும்
சிக்கன வாழ்வே வாழோணும் இதைத்
தினமும்மனைவி உணரோணும் ஓ..ஓ....(ஒண்ணு)