நாதர்முடி மேல் பாடல் வரிகள்

Movie Name
Thiruvarutchelvar (1967) (திருவருட்செல்வர்)
Music
K. V. Mahadevan
Year
1967
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே
நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே
ஆதிசிவன் தலை அமர்ந்த ஆணவமா
ஆதிசிவன் தலை அமர்ந்த ஆணவமா
அவன் அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா
அவன் அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா
நாதர்முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பே

ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே நன்றி மறந்தாய்
ஊர் கொடுத்த பால் குடித்து உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே நன்றி மறந்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே நஞ்சு கொடுத்தாய்
பெயருக்கு தகுந்தாற் போல் மாறிவிடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழவிடு
பெயருக்கு தகுந்தாற் போல் மாறிவிடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழவிடு

நெஞ்சம் மாறிவிடு பிள்ளையை வாழவிடு (7 முறை)

சங்கம் அமைத்தொரு முத்தமிழ் பாடிய சங்கரன் மீதினில் ஆணை
சங்கப் புலவர் தம் நாவினில் அடங்கிய செந்தமிழ் மீதினில் ஆணை
மங்கள குங்குமம் மஞ்சள் நிறைந்த சங்கரி மீதினில் ஆணை
மாதொரு பாதன் சூடிய நாகப்பாம்பே உன்மேல் ஆணை
தேவன் மீதில் ஆணை
அவன் திருவடி மீதும் ஆணை
திருமறை மீதில் ஆணை
என் திருநாவின் மேல் ஆணை
பண்மேல் ஆணை
சொல் மேல் ஆணை
என் மேல் ஆணை
உன் மேல் ஆணை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.