பூவுறங்குது பொழுதும் பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Thaai Sollai Thattadhe (1961) (தாய் சொல்லைத் தட்டாதே)
Music
K. V. Mahadevan
Year
1961
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
பூவுறங்குது பொழுதும் உறங்குது நீ யுறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை நானுறங்கவில்லை
பூவுறங்குது பொழுதும் உறங்குது நீ யுறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை நானுறங்கவில்லை

மானுறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை
மானுறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை என்
வழியுறங்குது மொழியும் உறங்குது விழியுறங்கவில்லை

பூவுறங்குது பொழுதும் உறங்குது நீ யுறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை நானுறங்கவில்லை

தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி அது
தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி
திங்கள் நீயும் பெண்குலமும் ஒருவகை ஜாதி
திங்கள் நீயும் பெண்குலமும் ஒருவகை ஜாதி
தெரிந்திருந்தும் சொல்ல வந்தாய் என்னடி நீதி?

பூவுறங்குது பொழுதும் உறங்குது நீ யுறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை நானுறங்கவில்லை

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.