திருச்செந்தூரில் போர் பாடல் வரிகள்

Movie Name
Deivam (1972) (தெய்வம்)
Music
Kunnakudi Vaidyanathan
Year
1972
Singers
Radha Jayalakshmi
Lyrics
Kannadasan
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ..
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆ

திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
இங்கே ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்

காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள்
புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள்
சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் சிற்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள்
பால் கவடி பழக் காவடி புஷ்பக் காவடி சேவற்காவடி மச்சக் காவடி

கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார்

வடிவேல் முருகனுக்கு அரோகரா
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
திருத்தணி முருகனுக்கு அரோகரா
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி
அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே

கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே கந்தனாருள் கூட வருமே
குமரன் அருள் கூட வருமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.