மரணத்தை எண்ணி பாடல் வரிகள்

Movie Name
Karnan (1964) (கர்ணன்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1964
Singers
Seerkazhi Govindarajan
Lyrics
Kannadasan
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா...
மரணத்தின் தன்மை சொல்வேன்...
மானிடர் ஆன்மா மரணமெய்தாது...
மறுபடி பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய் 
மேனியைக் கொல்வாய்
வீரத்தில் அதுவும் ஒன்று
நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி
வெந்து தான் தீரும் ஓர் நாள்... ஆ... ஆ...

என்னை அறிந்தாய் எல்லா உயிரும்
எனதென்றும் அறிந்து கொண்டாய்
கண்ணன் மனது கல் மனதென்றோ
காண்டீபம் நழுவ விட்டாய்
காண்டீபம் நழுவ விட்டாய்
மன்னரும் நானே மக்களும் நானே
மரம் செடி கொடியும் நானே
சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்...
துணிந்து நில் தர்மம் வாழ... ஆ...
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்...
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே
கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான்
கண்ணனே கொலை செய்கின்றான்
காண்டீபம் எழுக நின் கை வன்மை எழுக
இக்களமெலாம் சிவக்க வாழ்க... ஆ... ஆ... ஆ... 
பரித்ராணாய சாதூனாம்
விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.