Song lyrics

Manjal Mugam Lyrics

மஞ்சள் முகம் நிறம் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Viswanathan Ramamoorthy
Year
1964
Singers
P. Susheela
Lyricist
Kannadasan
Manjal Mugam

Lyrics

Manjal Mugam Lyrics

ஆஹாஹ ஆ... ஆ... ஆ...
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே

மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே


அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள்
அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே

அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே இவள்
அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே

துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உரு மாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே

மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி
வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம்
மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி
வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம் 
கர்ணன் தந்த பிள்ளை என்றால்
கார் மேகம் அல்லவா
கர்ணன் தந்த பிள்ளை என்றால்
கார் மேகம் அல்லவா

எதிர் காலத்தில் இந்த தேசத்தில்
அவன் கருணை செய்வான் அல்லவா
கருணை செய்வான் அல்லவா
{ மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி
வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ் என்று வாழ்த்து பாடுவோம் }
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people