Duraiye Ilamai Paaraai Lyrics
துரையே இளமை பாராய் பாடல் வரிகள்
Last Updated: Feb 02, 2023
துரையே இளமை பாராய்
கதைகள் கேளாய் இங்கே வாராய்
தனியே நில்லாதே கண்ணா ஓடிவா
வேகமாய் ஓடி வா.......(துரையே)
இசை பாடும் கண்கள் மீதே
இள நெஞ்சம் காட்டும் மாதே
உன்னைத் தேடி வந்தாள் ஐயா
மெய் இன்பம் காண வாராய்.....(துரையே)
கண்ணாலே பேசி வரும்
காந்தச் சிலை மான்விழி
காதல் கீதம் பாடும் தேன்மொழி
வானவில் வர்ணங் காட்டும் பூங்கொடியை
வந்து பார் வண்ணத் தேரிலே...
சந்தோஷமே கொண்டாடலாம் – தென்றல்
தாலாட்டும் நல் இன்பக் காவிலே.......(கண்ணாலே)
விஞ்ஞானக் கண்ணோட்டம் போதுமே
மெஞ்ஞானப் பெண்ணாளைப் பாருமே
உல்லாச எண்ணங்கள் இல்லாத உள்ளங்கள்
வாழ்வில் இன்பம் காணுமோ
கவிபாடும் கண்கள் மீதே
கலை ஞானம் கூறும் மாதே
கன்னல் மேனி கண்டேன் கண்ணே
மெய்க்காதல் கூற வாராய்
திருநாள் புதுமை காண்போம்
கதைகள் கேட்போம் ஒன்றாய் வாழ்வோம்
மணமே கொள்வோமே அன்பே
தாழ்விலா வாழ்வெலாம் காணுவோம்...!
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.