கொடி நாட்டுவேன் பாடல் வரிகள்

Movie Name
Kathanayaki (1955) (1955) (கதாயாயகி)
Music
G. Ramanathan
Year
1955
Singers
P. Leela
Lyrics
Kannadasan

கொடி நாட்டுவேன் வெற்றிக்
கொடி நாட்டுவேன்
காதல் சோகம் வீரம் நடிப்பேன்
அழகாய் நான் மேடையிலே.....(கொடி)

சுற்றி வந்து ஜனங்களெல்லாம்
எட்டி எட்டி பார்க்கணும்
சொல்லப்போனால் ரசிகரெல்லாம்
ஆட்டோகிராப் கேக்கணும்
பத்திரிக்கை எடிட்டரெல்லாம் வாசலிலே காக்கணும் (கொடி)

ஸ்டாரைப் போல நானும் வந்தால்
ஊரில் யாரும் மலைக்கணும்
டான்ஸிங் போஸில் என்னைக்கண்டு
தன்னால் வந்து மயங்கணும்
சந்தோஷமாய் ஜனங்களெல்லாம்
ஜாலியாக ரசிக்கணும்....காதல் வேணுமா........

ஆருயிரே பிரேமை அமுதவாரியில்
நாமும் கலந்து மகிழ்வோம் – ஸ்வாமி
காதல் பொய்கையில் மூழ்கி
சுகமடைந்தே மகிழ்வோம்.....சோகம் வேணுமா.....

இன்பத்தின் எல்லை இதுதானா
என் வாழ்விலே இறுதியிதுதானா ஹா..இதுதானா
அன்பின் முடிவு இதுதானா நானினியும்
ஆனந்தம் பெறுவேனோ நான் மகிழ்வேனோ....

வீரம் வேணுமா......
சண்டாள மூர்க்கன் தறுதலை மடையன்
தடித்தன முள்ளதோர் கொடியன்...
தில்லானா வேணுமா......
தீம் நாத்ருதீம் தீம்தனன
தகரதானி உதரதோம் தீம் தனன....

ஊரைச் சுற்றி கம்மிங் நோட்டீஸ்
பேரு போட்டு பறக்கணும்
ஒய்யாரமாய் ஸ்டேஜில் வந்தால்
உடனே கிளாப்ஸ் கொடுக்கணும்
உள்ளே போகும்போது எல்லாம்
ஒன்ஸ்மோர் என்னைக் கேட்கணும்.....(கொடி)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.