இட்லி சாம்பார் பாடல் வரிகள்

Movie Name
Kathanayaki (1955) (1955) (கதாயாயகி)
Music
G. Ramanathan
Year
1955
Singers
S. C. Krishnan
Lyrics
T. N. Ramiah Das

இட்லி சாம்பார் நம்ம இட்லி சாம்பார்
என்றும் ருசியாகத் தின்று பசியாறும் (இட்லி)

இட்லியைப் பார்த்து பூரி மசாலே
இழிவாய்ப் பேசுது தோழர்களே
இட்லி மகத்துவம் பூரிக்கு லேசாய்
எடுத்துச் சொல்லுவேன் கேளுங்களே....(இட்லி)

கள்ளுக் கடையை மூடி அரிசியின்
கண்ட்ரோல் கடையை எடுத்ததெது
காந்தி சொன்னதைத் தலைமேல் வைத்துக்
கௌரவம் தந்து காத்ததெது

பாட்டுக்கொருவன் பாரதியென்றே
பாடும் புலவனை தந்ததெது
சாட்டை கொடுக்கும் காவியம்
பாரதிதாசனை இங்கே தந்ததெது

அயல்நாட்டில் இந்து மதம் நிலை நாட்டவே
அதி விவேகானந்தரை செயலோடு
அமெரிக்கா தேசம் சென்று வர
செலவு செய்திட்டது ஏது......

யாரப்பா செலவு செஞ்சது தெரியாதா...
நம்ம ராமநாதபுரம் ராஜாதான்....

தெய்வத் திருக்குறள் செஞ்சிலப்பதிகாரம்
செல்வமாய்த் தந்தது எது
சீரான ஜோதிடம் சங்கீத விஞ்ஞான
சீலரைத் தந்தது எது....

மதராஸ் வாலா இட்லி சாம்பார்
மண்டைக் கர்வம் கொள்ளாது
மதியில்லாமே எவரையும் ஏசி
மடமையினாலே துள்ளாது...(இட்லி)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.