கண்ணுக்கு குலமேது பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Karnan (1964) (கர்ணன்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1964
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
கண்ணுக்கு குலமேது...

கண்ணுக்கு குலமேது 
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது 
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது 

விண்ணுக்குள் பிரிவேது கண்ணா 
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா 
விளக்குக்கு இருளேது

கண்ணுக்கு குலமேது 
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது 


பாலினில் இருந்தே... ஏ...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

பாலினில் இருந்தே நெய் பிறக்கும் 
கண்ணா பரம் பொருள் கண்டே 
உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும் அதில்
மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்

கண்ணுக்கு குலமேது 
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது 


கொடுப்பவரெல்லாம்... ஆ... ஆ... ஆ...

கொடுப்பவரெல்லாம் மேலாவார்
கையில் கொள்பவரெல்லாம் கீழாவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே

கண்ணுக்கு குலமேது 
கண்ணா கருணைக்கு இனமேது
கண்ணுக்கு குலமேது...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.