இடி இடிச்சு மழை பாடல் வரிகள்

Last Updated: Mar 28, 2023

Movie Name
Neethikku Pin Paasam (1963) (நீதிக்கு பின் பாசம்)
Music
K. V. Mahadevan
Year
1963
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு -
நெஞ்சில்இருண்ட வாசல் திறந்து வச்சு
இரண்டும் ஒண்ணாச்சுபடிப்படியா
வளர்ந்த ஆசை பக்குவமாச்சு - இன்று
பஞ்சாயத்தில் வந்த கோபம் பாதியில் போச்சு

இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு -
நெஞ்சில்இருண்ட வாசல் திறந்து வச்சு


குடம் குடமா தேனெடுத்து கொடுக்குது கண்ணு -
சும்மாகுடுகுடுன்னு நடந்த காலு தயங்குது நின்னு
படபடப்பா போன வேங்கை பாய்து நின்னு -
அதைப்பாக்க பாக்க மயக்கம் வந்து சாயுது கண்ணு

இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு -
நெஞ்சில்இருண்ட வாசல் திறந்து வச்சு


அத்தை வீட்டில் புகுந்தவுடன் ஆனந்தப் பாட்டு -
ஒருபத்து மாதம் போன பின்னல் பாடும் தாலாட்டு
அத்தான் அத்தான் என்று நானும் அழைப்பதைக் கேட்டு -
படுசத்தம் போட்டுக் குழந்தை பாடும் சங்கீதப் பாட்டு

இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு -
நெஞ்சில்இருண்ட வாசல் திறந்து வச்சு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.