நீயோ நானோ யார் நிலவே பாடல் வரிகள்

Last Updated: Sep 29, 2023

Movie Name
Mannadhi Mannan (1960) (மன்னாதி மன்னன்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1960
Singers
K. Jamuna Rani, P. B. Srinivas, P. Susheela
Lyrics
Kannadasan
நீயோ நானோ யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே
நினைவைக் கவர்ந்தது யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே


நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே
நிம்மதி இழந்தது யார் நிலவே
நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே

இரவின் அமைதியில் நீ வருவாய்
இரவின் அமைதியில் நீ வருவாய்
என் மன நிலையும் நீ அறிவாய்
உறவின் சுகமும் பிரிவின் துயரும்
உனைப் போல் என் மனம் அறியாதோ


நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே

பூ விரிச் சோலையில் மயிலாடும்
பூ விரிச் சோலையில் மயிலாடும்
புரிந்தே குயில்கள் இசை பாடும்
காவிரி அருகே நானிருந்தாலும்
கண்ணே என் மனம் உனை நாடும்

நீயோ நானோ யார் நிலவே
இன்று நிம்மதி இழந்தது யார் நிலவே

தேய்வதும் மறைவதும் உன் அழகே
தேய்வதும் மறைவதும் உன் அழகே
அவர் சிந்தையில் நிலைப்பாடு என் வடிவே
பார்த்தது போதும் பருவ நிலாவே
பாவை என் துணையை மயக்காதே

நீயோ நானோ யார் நிலவே
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.