இருக்கும் இடத்தை பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Thiruvarutchelvar (1967) (திருவருட்செல்வர்)
Music
K. V. Mahadevan
Year
1967
Singers
Seerkazhi Govindarajan
Lyrics
Kannadasan
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

உன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்
ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே ஏ….
உன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்
ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டுக் கொள்வாய் அவனை ஞானத்தங்கமே ஏ….
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டுக்கொள்வாய் அவனை ஞானத்தங்கமே
அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே ஏ….
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே
அவன்தான் தரணியை படைத்தாண்டி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.