யாருக்காக பாடல் வரிகள்

Last Updated: Apr 07, 2026

Movie Name
Vasantha Maligai (1972) (வசந்த மாளிகை)
Music
K. V. Mahadevan
Year
1972
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக

காதலே போ போ
சாதலே வா வா

மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்க்கமாக நான் நினைத்தது
இன்று நரகமாக மாறிவிட்டது
யாருக்காக... இது யாருக்காக...

மலரைத் தானே நான் பறித்தது
கை முள்ளின் மீது ஏன் விழுந்தது
உறவைத் தானே நான் நினைத்தது
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது

எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று (ஹாஹாஹா)

கண்கள் தீட்டும் காதல் என்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மைப் பித்தனாக்கி அலையவைப்பது

எங்கிருந்து சொந்தம் வந்தது
இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது
அங்கிருந்து ஆட்டுகின்றவன்
தினம் ஆடுகின்ற நாடகம் இது

யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக... இது யாருக்காக...


Yaarukkaaga ithu yaarukkaaga
Intha maaligai vasantha maaligai
Kaathal oviyam kalaintha maaligai
Yaarukkaaga ithu yaarukkaaga

Kaathale po po
Saathale vaa vaa

Maranam ennum thoothu vanthathu
Athu mangai ennum vadivil vanthathu
Sorgamaaga naan ninaithathu
Indru naragamaaga maari vittathu
Yaarukkaaga... ithu yaarukkaaga...

Malarai thaane naan parithathu
Kai mullin meethu yaen vizhunthathu
Uravai thaane naan ninaithathu
Ennai pirivu vanthu yaen azhaithathu

Ezhuthungal en kallaraiyil
Aval irakkam illaathaval endru
Paadungal en kallaraiyil
Ivan paithiyakaaran endru (Hahaha)

Kangal theettum kaathal enbathu
Athu kannil neerai varavazhaippathu
Pengal kaattum anbu enbathu
Nammai pithanaaki alaiya vaippathu

Engirunthu sontham vanthathu
Indru engirunthu nanju vanthathu
Angirunthu aatugindravan
Thinam aadugindra naadagam ithu

Yaarukkaaga ithu yaarukkaaga
Intha maaligai vasantha maaligai
Kaathal oviyam kalaintha maaligai
Yaarukkaaga... ithu yaarukkaaga...