Annam Pole Unnai Lyrics
அன்னம் போலே (இன்பம்) பாடல் வரிகள்
Last Updated: Jun 02, 2023
அன்னம் போலே உன்னை தன்
அருகில் வைத்தாள் அன்னை
நீ கண்கள் மூடி கற்பனை தேரில்
செல்வாய் எந்தன் கண்ணே....(அன்னம்)
கத்திரிப் பூவின் வண்ணம் போலே
சித்திர வானம் தன்னில்
சத்திரபதி நம் சிவாஜி ராஜன்
சந்திக்க வருவார் உன்னை
தன் கை வாளும் குதிரையும் தந்து
தாவி அணைப்பான் கண்ணே.....(அன்னம்)
உலகினில் வாழும் மனிதர்க்கெல்லாம்
ஒற்றுமையுடனே சாந்தி
ஊட்டி வளர்த்தவன் உன்னத தலைவன்
உத்தமன் எங்கள் காந்தி
காட்டிய வழியில் நாட்டிய முறையில்
வாழிய கண்ணே வாழ்க.....(அன்னம்)
உள்ளம் போலே உலகம் என்று
உண்மைகள் கண்டு சொன்னான்
வள்ளுவ பெருமான் திருக்குறள் தந்து
வாழ்த்துகள் நூறு சொல்வான்
கள்ளமில்லாமல் அவர் வழி சென்றால்
கண்ணே நீதான் தெய்வம்.....(அன்னம்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.