Annam Pole Unnai (Sad) Lyrics
அன்னம் போலே (சோகம்) பாடல் வரிகள்
Movie Name
Anbu Magan (1961) (அன்பு மகன்)
Music
T. Chalapathi Rao
Year
1961
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
அன்னம் போலே உன்னை தன்
அருகில் வைத்தாள் அன்னை இன்று
கண்கள் இங்கே கண்மணி அங்கே
காலம் பிரித்தது நம்மை.....(அன்னம்)
பேசும் கிளியை அருகில் அழைத்தார்
பேச்சை மறந்திடு என்றார்
பாடும் குயிலை கூண்டில் அடைத்தார்
பாட்டை இழக்க என்றார்
ஆடும் மனதை ஆசையை மட்டும்
மூட மறந்தார் சென்றார்.....(அன்னம்)
வந்தது போலே வந்தாய் மகனே
நின்றது போலே நின்றாய்
தன்னந்தனியே அன்னை இருக்க
சென்றாய் மகனே சென்றாய்
எங்கிருந்தாலும் யார் வளர்த்தாலும்
என் மகனே நீ வாழ்க...(அன்னம்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.