ஒருத்தி மகனாய்ப் பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Thaai Sollai Thattadhe (1961) (தாய் சொல்லைத் தட்டாதே)
Music
K. V. Mahadevan
Year
1961
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் 
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம் 
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் 
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம் 
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்

உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்
உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்
உலகத்தின் ரகசியம் அறிந்தவனாம்
உள்ளத்தின் கதைகள் தெரிந்தவனாம்
பழகும் விதமும் புரிந்தவனாம்
பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்
பழகும் விதமும் புரிந்தவனாம்
பார்க்கும் பார்வையில் தெளிந்தவனாம்

ஆஹா ஒஹோ ம்ம்ம்ம்ம்

ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் 
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம் 
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்

இளையவள் முகத்தைப் பார்த்தானாம்
இதயத்தை அவளிடம் கொடுத்தானாம்
இளையவள் முகத்தைப் பார்த்தானாம்
இதயத்தை அவளிடம் கொடுத்தானாம்
அழகியை அருகினில் அழைத்தானாம்
ஆசையில் அவளை அணைத்தானாம்
அழகியை அருகினில் அழைத்தானாம்
ஆசையில் அவளை அணைத்தானாம்

ஆஹா ஒஹோ ம்ம்ம்ம்ம்

சாத்திரம் சரித்திரம் படித்தவனாம்
தவறு செய்பவரைப் பிடிப்பவனாம்
ராத்திரி பகலாய் அலைவானாம்
ரகசியக் கோவில் சேவகனாம்

ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம் 
உருவில் அழகாய் வளர்ந்தவனாம்
ஒருத்தி மனதில் நிறைந்தவனாம் 
உயிரில் உயிராய்க் கலந்தவனாம்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.