பட்டுச் சேலை காத்தாட பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Thaai Sollai Thattadhe (1961) (தாய் சொல்லைத் தட்டாதே)
Music
K. V. Mahadevan
Year
1961
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளேஅரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
அரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும்
கையில் எடுத்தால் துவண்டு விடும் கன்னம் இரண்டும் சிவந்து விடும்
சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே

நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு

கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே

குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்
உறங்கினாலும் விழித்தாலும் ஊர்கள் தோறும் அலைந்தாலும்
மயங்க வைத்தது ஒரு முகமே மங்கை உன்தன் திருமுகமே

காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே

கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே

பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட

குறும்பு பார்வை பார்த்தவரே என்னக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.