மனம் படைத்தேன் பாடல் வரிகள்

Last Updated: Feb 06, 2023

Movie Name
Kandan Karunai (1967) (கந்தன் கருணை)
Music
K. V. Mahadevan
Year
1967
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு


மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க ( இசை )

மத்தளம் மேளம் முரசொலிக்க
வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க 
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் 
கனவு கண்டேன்
கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் 
அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான்

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு


பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன்
தோழி... 
தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்

மனம் படைத்தேன் ... ஏ...
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு


செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
செவ்வேல் என நீ பெயர் கொண்டாய்
சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
கை வேல் கொண்டு நீ பகை வென்றாய்
இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய்

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.