மழை கொடுக்கும் பாடல் வரிகள்

Last Updated: Mar 31, 2023

Movie Name
Karnan (1964) (கர்ணன்)
Music
Viswanathan Ramamoorthy
Year
1964
Singers
Trichy Loganathan
Lyrics
Kannadasan
மழை கொடுக்கும் கொடையுமொரு
இரண்டு மாதம்...
வயல் கொடுக்கும் கொடையுமொரு
மூன்று மாதம்...
பசு வழங்கும் கொடையுமொரு
நான்கு மாதம்...
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ
நாளும் மாதம்...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை )

நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடு தோறும் நடந்து சிவந்தன 
பாவலர் கால்கள்
நற்பொருளை தேடிச் சிவந்தன
ஞானியர் நெஞ்சம்... ம்... 
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது
கர்ண மாமன்னன் திருக் கரமே.... 
தேய்ந்து சிவந்தது 
கர்ண மாமன்னன் திருக் கரமே ( இசை )
மன்னவர் பொருள்களை 
கை கொண்டு நீட்டுவார்
மற்றவர் பணிந்து கொள்வார்...
மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்
மற்றவர் எடுத்துக் கொள்வார்...
வலது கை கொடுப்பதை 
இடது கை அறியாமல் வைத்தவன் கர்ண வீரன்
வறுமைக்கு வறுமையை
வைத்ததோர் மாமன்னன் 
வாழ்கவே வாழ்க வாழ்க
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை )
என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்
என்றிவர்கள் எண்ணும் முன்னே... ஏ... ஏ...
பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால் 
இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் 
தன்னைக் கொடுப்பான்
தன் உயிரும் தான் கொடுப்பான்
தயாநிதியே... 
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ( இசை )
அனைவர் ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி ( இசை )
தாயினும் பரிந்து சாலச் சகலரை
அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிர்கட் கெல்லாம்
துணைக் கரம் கொடுப்பாய் போற்றி
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி
ஞாயிறே நலமே வாழ்க
நாயகன் வடிவே போற்றி
நாநிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி போற்றி...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.