காதல் மலர் கூட்டம் பாடல் வரிகள்

Movie Name
Deiva Magan (1969) (தெய்வ மகன்)
Music
M. S. Viswanathan
Year
1969
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
பாதம் முதல் கூந்தல் வரை
பால் வடியும் கிளிகள் என
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

வக்கீல் ஆத்து வசந்தா உன்
மனதை எந்தன் வசந்தா
வக்கீல் ஆத்து வசந்தா உன்
மனதை எந்தன் வசந்தா
வட்ட கண்கள் சுழன்றாடிட
வாராய் எந்தன் விருந்தா
ஆடை கொஞ்சம் அசைந்தா
மாலா
ஆடை கொஞ்சம் அசைந்தா
உன் ஆசை கொஞ்சம் கலந்தா
நான் அணைப்பேன் கை கொடுப்பேன்
உன் விழியாலே வரந்தா

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

ஜப்பான் ரிடர்ன் ஜயந்தி
உன் மேனி வண்ணம் செவந்தி
ஜப்பான் ரிடர்ன் ஜயந்தி
உன் மேனி வண்ணம் செவந்தி
மெல்லப்பேசும் இதழ் பூவிலே
தேனை கொஞ்சம் அருந்தி
கூந்தல் தன்னை திருத்தி
மீனா
கூந்தல் தன்னை திருத்தி
உன் கொஞ்சும் கண்ணை நடத்தி
நான் அழைப்பேன் என் மனத்தில்
ஒரு மணமேடை அமர்த்தி

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

சொக்கத்தங்கம் ஒடம்பு
நீ சொல்லும் வார்த்தை கரும்பு
முத்துத் தேரும் பழத் தோட்டமும்
முன்னால் உண்டு திரும்பு
வெள்ளி தட்டில் அரும்பு
நீ அள்ளி கொஞ்சம் வழங்கு
நான் வளைப்பேன் கை பிடிப்பேன்
என் மடி மீது மயங்கு

காதல் மலர் கூட்டம் ஒன்று
வீதி வழி போகும் என்று
யாரோ சொன்னார் யாரோ சொன்னார்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.