அன்புள்ள நண்பரே பாடல் வரிகள்

Movie Name
Deiva Magan (1969) (தெய்வ மகன்)
Music
M. S. Viswanathan
Year
1969
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
பெலபில பலபம் பெலபில பலபம்
பெலபில பலபம் பெலபில பலபம்
பெலபில பலபம் பெலபில பலபம்
பம்... பூம்... பம்...

அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே
அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே
கட்டிக் கட்டி தள்ளாட முத்தமிட்டு கொண்டாட 
பொன்னான நன்னாளிதே பொன்னான நன்னாளிதே

பெலபில பலபம் பெலபில பலபம்
பெலபில பலபம் பெலபில பலபம்
பம்... பூம்... பம்...

அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே

கட்டழகு வட்ட முகம் கட்டழகு வட்ட முகம்
என் கதையில் அவளே கதாநாயகி...
கல்லிருக்கும் முல்லை மலர்
கல்லிருக்கும் முல்லை மலர்
என் கனவில் மலர்ந்த ஒரே காதலி...
கண் மலரும் வண்ண உடல் பொன்னழகோ
கன்னியவள் புன்னகையில் வெண்ணிலவோ... ஓ... ஓ...

அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே

செவ்விதழில் பூவெடுத்து செவ்விதழில் பூவெடுத்து
என் மனதில் ஒரு நாள் மலர் தூவினாள்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
என் மடியில் விழுந்து கதை பேசினாள்
அண்டி வரும் தென்றலையும் வென்றவளோ....
அள்ளி வரும் பிள்ளை முகம் கொண்டவளோ... ஓ... ஓ...

அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே

பந்தடிக்கும் நந்தவனம் 
என் பருவம் முழுதும் அவள் நெஞ்சிலே
பொன்னுலகம் என்னுலகம் 
என் பொழுதும் சுகமும் அவள் கையிலே
இன்று முதல் அன்னமவள் என்னிடமே....
என் உறவும் ராணி அவள் கண்ணிடமே... ஏ... ஏ...

அன்புள்ள நண்பரே... ஹொ அழகு பெண்களே
கட்டிக் கட்டி தள்ளாட முத்தமிட்டு கொண்டாட 
பொன்னான நன்னாளிதே பொன்னான நன்னாளிதே
பொன்னான நன்னாளிதே பொன்னான நன்னாளிதே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.