Ninaive Ninaive Nenjam Lyrics
நினைவே நினைவே பாடல் வரிகள்
Last Updated: Oct 01, 2023
Movie Name
Thanthai (1953) (தந்தை)
Music
P. S. Divakar
Year
1953
Singers
Kaviyoor Revamma
Lyrics
Kannadasan
நினைவே நினைவே நெஞ்சம் மறவாத
உன் காதல் எந்நாளும் புவி மீதில்
தனியானேன் பாவி சோறுதே ஆவி
சந்தேகப் பேயாம் சூறை காற்றின்
பஞ்சாய் மெலிந்தேனே........(நினைவே)
மகனே உன் தேன் முத்தமே
மறவாத சித்தமே
பகல்தானே இரவாய் பாழும் நரகாய்
பாசம் நகைக்கின்றதே...(நினைவே)
அம்மா அம்மா என நீ சொல்லும் மழலை
உயிரில் துடிக்குதடா
ஆனந்த நிலவே தாலாட்டும் கைகள்
வருந்தித் துடிக்குதடா
கண்ணீரும் பெண்ணும் ஒன்றாய் உதிக்க
கடவுள் விதித்தானே
கண்ணில்லா சமூக காட்டில் அகதியாய்
கலங்க விடுத்தானே.........(நினைவே)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.