Song lyrics

Devaney Dheena Thayaaparaney Lyrics

தேவனே தீன தயாபரனே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
P. S. Divakar
Year
1953
Singers
P. Leela
Lyricist
Kannadasan
Devaney Dheena Thayaaparaney

Lyrics

Devaney Dheena Thayaaparaney Lyrics

தேவனே தீன தயாபரனே
திருமலர் பதமே சிந்தையின் பலமே
ஜெகத்தில் நீயே சதமே
தேவனே தீன தயாபரனே.....

சத்திய ஜோதி வேதத்தின் ஆதி
சார்ந்திடும் தொண்டர்கள் தன்மய நீதி
தன்னருள் செய் பரனே
தேவனே தீன தயாபரனே.....

சுழலும் மாயையில் தோன்றும் லீலையில்
சூறையில் மூழ்கச் செய்யாதே
அழியும் காமக் கடல் அலைகள் படாதே
அன்பெனும் கலம் தருவாயே
அடைக்கலம் உன் சரணே.....(தேவ)

மானமும் செல்வமும் மார்க்கமும் நீயே
மானிட வாழ்வின் எல்லையும் நீயே
மாநிலப் பொதுவாம் ஞானமும் நீயே
மனமிரங்காய் பரனே......(தேவ)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people