பாராய் கலைமானின் பாடல் வரிகள்

Movie Name
Thanthai (1953) (தந்தை)
Music
P. S. Divakar
Year
1953
Singers
P. Leela
Lyrics
Kannadasan

பாராய் கலைமானின் கண்ணில் தாரையே
வாராய் அலைபோலே ஆடிச் சேரவே
தேவநற் தவமணியே வருவாய்
ஜீவபொற் சுகந்தருவாய் உயர் தேவ
வான் மழை காணும் தோகை போல் நானும்
ஆனந்த நடனம் ஆடுவேன் பார்....(உயர்)

மாங்குயில் ஜோடி பாடுது கீதம்
தேன் மலர் வண்டின் இசை நாதம்
சேர்ந்திழைவோமே மாமரங் கொடிபோல்
சேவடி நாடினேன் என் ஸ்வாமி (உயர்)

காதல் கடலிலே நீந்தி மகிழவே
கண்டோம் வாழ்வின் காலமிதே
கருத்து ஒன்றாகி கலந்தே சுகிக்க
கன்னி என் தேகம் கண்டாயே.....(உயர்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.