அழகாக கண்ணுக்கு பாடல் வரிகள்

Last Updated: Oct 01, 2023

Movie Name
Aathi Parasakthi (1971) (ஆதி பராசக்தி)
Music
K. V. Mahadevan
Year
1971
Singers
S. Janaki
Lyrics
Kannadasan
பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக

பெண் : நினைவாக ஆஆ
பெண்ணின் நினைவாக
இங்கே கண்கள் நான்கும்
மயங்குமா பெண்ணின்
நினைவாக ஆஆ பெண்ணின்
நினைவாக

பெண் : { மோக கவிதைக்கு
முன்னுரை தீட்டிடும் நாத
சலங்கைகள் கொண்டு மலர்
செண்டு மனம் கண்டு } (2)

பெண் : முத்து பதித்த ஒரு
இரத்தின பல்லக்கு வந்தது
போல் வந்து நின்று வட்டம்
இடுவதை தட்டி பறித்திட
வாடுது உள்ளங்கள் ரெண்டு

பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக

பெண் : { நீருண்ட
மேகத்தின் ஊர்வலம்
போல் வந்து சீர்கொண்ட
கூந்தலை கண்டு மது
உண்டு மனம் கொண்டு } (2)

பெண் : மஞ்சள் முகத்தினில்
மாணிக்க மூக்குத்தி கொஞ்சிடும்
ஜோதியில் நின்று தஞ்சம்
அடையவும் தம்மை மறக்கவும்
கெஞ்சுது உள்ளங்கள் ரெண்டு

பெண் : அழகாக கண்ணுக்கு
அழகாக கற்பக சோலை கன்னி
வந்தாள் கண்ணுக்கு அழகாக
கண்ணுக்கு அழகாக

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.