பூவாடை காரி பாடல் வரிகள்

Movie Name
Aathi Parasakthi (1971) (ஆதி பராசக்தி)
Music
K. V. Mahadevan
Year
1971
Singers
Seerkazhi Govindarajan
Lyrics
Kannadasan
ஆண் : பூவாடை காரி
பொன்னழகி உனக்கு
பொங்கலிட கெடச்சது
பாக்கியம் எனக்கு

ஆண் : மீன்காரன்
வீடெங்கும் மீன் வாசம்
இருக்கும் அடி மீனாட்சி
நீ வந்தா நெய் வாசம்
அடிக்கும்

ஆண் : { ஆத்தாடி
மாரியம்மா சோறு
ஆக்கி வெச்சேன் வாடி
அம்மா ஆழாக்கு அரிசியை
பாழாக்க வேண்டாம் தின்னு
புட்டு போடி அம்மா } (2) ஆ

குழு : ……………………………

ஆண் : { பாட்டெடுத்து
தாளமிட்டேன் ஓடி
வரல்லே ஆடி பாத்து
புட்டேன் பிள்ளை முகம்
தேடி வரல்லே } (2)

ஆண் : { பேச்சுப்படி
பொங்கல் உன்ன இங்கு
வரல்லே நான் மூச்சடக்கி
உன்னிடத்தில் அங்கு
வருவேன் } (2)

ஆண் : ஆத்தாடி
மாரியம்மா சோறு
ஆக்கி வெச்சேன் வாடி
அம்மா ஆழாக்கு அரிசியை
பாழாக்க வேண்டாம் தின்னு
புட்டு போடி அம்மா

குழு : ……………………………

ஆண் : { சீக்கிரத்தில்
காட்சி தந்த செல்வநாயகி
புது சேலைக்காரி பூக்காரி
தெய்வநாயகி } (2)

ஆண் : { பத்ர காளி
ருத்ர காளி பாரடி
அம்மா இந்த பாவி
முகம் வீட்டில் கை
வையடியம்மா } (2)

ஆண் : ஆத்தாடி
மாரியம்மா சோறு
ஆக்கி வெச்சேன் வாடி
அம்மா ஆழாக்கு அரிசியை
பாழாக்க வேண்டாம் தின்னு
புட்டு போடி அம்மா ஆ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.