நாலு பக்கம் வேடருண்டு பாடல் வரிகள்

Last Updated: Jun 04, 2023

Movie Name
Annan Oru Koyil (1977) (அண்ணன் ஒரு கோவில்)
Music
M. S. Viswanathan
Year
1977
Singers
S. P. Balasubramaniam, Vani Jayaram
Lyrics
Kannadasan
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா

காட்டினிலே கூடு கட்டி
கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல் கொஞ்சம் ஊடல்
அம்மம்மா என்னம்மா

ஆரண்யக் காண்டமிதை தொடங்கு
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
ஆரண்யக் காண்டமிதை தொடங்கு
அயோத்தி பஞ்சணை போல் மயங்கு
சாகுந்தலம் படிக்க இறங்கு
தலையடியில் கை வைத்து உறங்கு
தலையடியில் கை வைத்து உறங்கு
அம்மம்மா என்னம்மா

நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா

ஆ... 

ஆ... ஆ... ஆ... 

ஆ... ஆ... ஆ... 

பாலோடு பாத்திரத்தை எடுத்து
பஞ்சாமிர்தம் கலந்து கொடுத்து
தாகங்கள் தீரும் வரை குடித்து
சல்லாப நாடகத்தை நடத்து
சல்லாப நாடகத்தை நடத்து
அம்மம்மா என்னம்மா

தேனுண்ட செங்கனி வாய் இரண்டு
ஸ்ருங்கார ராகமென திரண்டு

நான் உண்ணும் வேளையிலே மிரண்டு
நாணத்தில் போவதென்ன உருண்டு
நாணத்தில் போவதென்ன உருண்டு

அம்மம்மா

என்னம்மா

நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்

அம்மம்மா

என்னம்மா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.