நீ தொட்டால் எங்கும் பாடல் வரிகள்

Last Updated: Jul 17, 2026

Movie Name
Nalla Neram (1972) (நல்ல நேரம்)
Music
K. V. Mahadevan
Year
1972
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
ஒன்று, பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ .. 

தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
ஒன்று, பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ .. 

நேற்று நடந்ததற்கு இன்று பாராட்டவா ?
இன்று தாலாட்டு பள்ளியில் பாராட்டு
யாவும் நீ காட்டும் சுகமல்லவா
என்னை பெண்ணாக்கி நீ தந்த
இன்பங்கள் என்னென்ன நான் சொல்லவா ..
அன்று கண்ணாடி முன்னாலே
நான் கண்ட கோலங்கள் இன்று வேரல்லவோ .. 

தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
ஒன்று, பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ .. 

கட்டில் இருக்கின்றதே தொட்டில் எப்போதம்மா
கட்டில் கொண்டாட காவியம் பண்பாட
தொட்டில் உறவாட பிள்ளை வரும்
இன்று நான் கொண்ட முத்தங்கள்
அப்போது பிள்ளைக்கு போய் விடுமோ ..
இந்த பிள்ளைக்கு மிச்சம் மீதி இல்லாமல் போய் விடுமோ ..

தொட்டால் எங்கும் பொன்னாகுமே பொன்மேனி என்னாகுமோ ..
ஒன்று, பத்து நூறு என்றும் உன்னாலே உண்டானதோ ..