மருதமலை மாமணியே பாடல் வரிகள்

Movie Name
Deivam (1972) (தெய்வம்)
Music
Kunnakudi Vaidyanathan
Year
1972
Singers
Madurai Somu
Lyrics
Kannadasan
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்குமலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை....
அஆஆ.. ஆஆஆஆஆ
மருதமலை மருதமலை...... முருகா

மருதமலை மாமணியே. முருகய்யா
மருதமலை மாமணியே. முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா.....
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா....

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

மருதமலை மாமணியே முருகய்யா......
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆஆஆ..
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆஆஆஆ..

மருதமலை மாமணியே முருகய்யா...
தேவரின் குலம் காக்கும் வேலய்யா.. ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா...

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆஆஆஆஆ…ஆஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா...
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவே.....ன் நான் மறவே.....ன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவே...ன் நான் வருவே...ன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவே.....ன் நான் மறவே....ன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவே.....ன் நான் வருவே....ன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லா....ம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லா....ம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லா...ம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லா...ம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவா....ய் குகனே.... வே....லய்யா.... ஆஆ…

ஆஆஆ ஆஆஆஆ

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா

மருதமலை மாமணியே முருகய்யா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.