குங்குமக் கோலங்கள் பாடல் வரிகள்

Movie Name
Annan Oru Koyil (1977) (அண்ணன் ஒரு கோவில்)
Music
M. S. Viswanathan
Year
1977
Singers
Vani Jayaram
Lyrics
Kannadasan
குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
கோடிக் காலங்கள் நான் தேடி நின்றேன்
அவனை அறிவேனடி

குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி

வானில் புகையோடு வருகின்ற தேரில்
ஞானத் திருச்செல்வன் வர வேண்டும் நேரில்
மானம் மரியாதை அவன் கையில் தாயே
அவனை என் கையில் தர வேண்டும் நீயே
தெய்வீகமன்றோ பெண்ணுக்கு தாலி
மணவாளன் தானே தாலிக்கு வேலி

குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி

மெத்தை விளையாட்டு சுகம் கண்ட பின்னே
தத்தை மொழியோடு தவழ்கின்ற கண்ணே
தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு
வந்த பின்னாலே பதினாறு பேறு
தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு
வந்த பின்னாலே பதினாறு பேறு
நாளைக்கு கண்ணில் மணவாளன் காட்சி
நம்பிக்கை வானில் தெய்வங்கள் சாட்சி

குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.