யாரோடும் பேசக் கூடாது பாடல் வரிகள்

Last Updated: Jun 02, 2023

Movie Name
Ooty Varai Uravu (1967) (ஊட்டி வரை உறவு)
Music
M. S. Viswanathan
Year
1967
Singers
L. R. Eswari, P. B. Srinivas
Lyrics
Kannadasan
யாரோடும் பேசக் கூடாது  ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது  ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது  ஆகட்டும்
வேறொன்றை நாடக் கூடாது  ஆகட்டும்

உள்ளத்தில் இல்லாதது சொல்லுக்கோ வராதது
என்னென்று ஒரே முறை சொல்லலாமா
கன்னத்திலா உடல் வண்ணத்திலா
கன்னத்திலா உடல் வண்ணத்திலா
மாங்கனி ஊறும் செவ்வாயின் கிண்ணத்திலா
ஆ ஹாஹஹா
முத்து போல் உண்டாவது முல்லை பூ செண்டாவது
இன்னும் நான் சொல்லாததை சொல்லலாமா
சொல்லுங்களேன் பெண்ணை வெல்லுங்களேன்
சொல்லுங்களேன் பெண்ணை வெல்லுங்களேன்
வண்ண தோளோடு தோள் சேர நில்லுங்களேன்

பக்திக்கும் இல்லாதது முக்திக்கும் விடாதது
தித்திக்கும் அதா இது என்ன இன்பம்

இன்பம் வரும் அது இன்னும் வரும்
இன்பம் வரும் அது இன்னும் வரும்
கொஞ்சம் நாளாக நாளாக சொர்க்கம் வரும்
ம்… ம்… ம்…
மன்றத்தில் விழா வரும்
மஞ்சத்தில் நிலா வரும்
என்றைக்கும் இதே சுகம் விளையாடும்
மஞ்சத்திலா உங்கள் நெஞ்சத்திலா
மஞ்சத்திலா உங்கள் நெஞ்சத்திலா
அந்த மணநாளை ஊர் கேட்க சொல்லட்டுமா
ம்… ம்… ம்…
யாரோடும் பேசக் கூடாது  ஆகட்டும்
கேட்டாலும் சொல்லக் கூடாது  ஆகட்டும்
நீ மட்டும் மாறக் கூடாது  ஆகட்டும்
வேறொன்றை நாடக் கூடாது  ஆகட்டும்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.