அண்ணன் ஒரு கோவில் (பெண்) பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Annan Oru Koyil (1977) (அண்ணன் ஒரு கோவில்)
Music
M. S. Viswanathan
Year
1977
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ...


அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ 
அன்று சொன்ன வேதமன்றோ
அதன் பேர் பாசமன்றோ


அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ...

பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
அண்ணனன்றி யாருமுண்டோ
பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அண்ணனன்றி யாருமுண்டோ
பின்னும் ஒரு சொந்தமுண்டோ
அதன் பேர் பாசமன்றோ

அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ...

தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளிலிட்ட தந்தையில்லை 
தொட்டிலிட்ட தாயுமில்லை
தோளிலிட்ட தந்தையில்லை 
கண் திறந்த நேரம் முதல்
கை கொடுத்த தெய்வமன்றோ
அதன் பேர் பாசமன்றோ

அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ...

கண்ணன் மொழி கீதை என்று
கற்றவர்கள் சொன்னதுண்டு
கண்ணன் மொழி கீதை என்று
கற்றவர்கள் சொன்னதுண்டு
அந்த மொழி எனக்கெதற்கு
அண்ணன் மொழி கீதையன்றோ
அதன் பேர் பாசமன்றோ

அண்ணன் ஒரு கோவில் என்றால்
தங்கை ஒரு தீபமன்றோ... ஓ...

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.