சக்செஸ் சக்செஸ் பாடல் வரிகள்

Movie Name
Kalyani (1952) (கல்யாணி)
Music
G. Ramanathan
Year
1952
Singers
K. Jamuna Rani
Lyrics
Kannadasan

சக்செஸ்...! சக்செஸ்...! சக்செஸ்...!

ஆபரேஷன் இல்லா மிக அற்புதமான ட்ரீட்மென்ட்
அருமையானது அம்மா கண்டது – சக்செஸ்..

உலக விஞ்ஞானிகள் மத்தியிலே
ஒரு புது முறை விஞ்ஞானி
ஓராயுதமில்லா வைத்தியர் நானே
அற்புத விஞ்ஞானி சக்செஸ்.....சக்செஸ்...

கண்ண வலிச்சா பென்ஸலின்
கழுத்த வலிச்சா பென்ஸலின்
அஜீர்ணமா ஒரு பென்ஸலின்
அதிகப் பசியா பென்ஸலின்..

பைத்தியம் பிடிச்சா சுக்கு கஷாயம்
பல்ல வலிச்சா சுக்கு கஷாயம்
இடுப்ப வலிச்சா சுக்கு கஷாயம்
எலும்பு முறிஞ்சா சுக்கு கஷாயம்

ஆயிரம் நோய்க்கும் அதையே கொடுக்கும்
ஆயுர் வேதர் திகைக்கணும்
சித்த வைத்தியர் திணறணும்
யூனானி யாரோ ஓடணும்......(சக்செஸ்)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.