வாழ்வில் உன் கோரிக்கை பாடல் வரிகள்

Movie Name
Pattaliyin Sabatham (1958) (பாட்டாளியின் சபதம்)
Music
O. P. Nayyar
Year
1958
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyrics
Kannadasan

வாழ்வில் உன் கோரிக்கை போலே
வரம் வாங்கியே வந்தேன்
வாழ்வில் உன் கோரிக்கை போலே
வரம் வாங்கியே வந்தேன்..

விழி சொல்லும் துணை கண்டோமென்றே
மனம் சொல்லும் ப்ரேமை பெற்றோமின்றே
ப்ரேமை பெற்றேன் துணை நானும் பெற்றேன்
இங்கே நவ நன்னாடு பெற்றேன்

ஆர்வமெல்லாம் நிறைவேறப் பெற்றேன்
ஜீவியத்தில் சௌபாக்கியமுற்றேன்
விதியினால் சேர்ந்தோமின்னாளே ஹஹஹா
வாழ்வில் உன் கோரிக்கை போலே..

இளமைக்கே நெஞ்சில் சந்திர விழி
வருவாயோ இடர் கான் வழி
கூட்டிச் செல் நீ செல்லும் வழி
இதுவேதான் மனதின் மொழி

ஓ...ஓ...ஒ..காலமும் நீயே கதிரும் நீயே
ஆ....ஆ....ஆ.சாலையும் நீ போம் இடமும் நீயே
உயிர் உடலானதினாலே ஹஹஹாஹ்
வாழ்வில் உன் கோரிக்கை போலே.....

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.