வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் பாடல் வரிகள்

Movie Name
Kalyani (1952) (கல்யாணி)
Music
G. Ramanathan
Year
1952
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan

வாழ்வார்க்கே இடங் கொடுக்கும் வையகத்தில்
வகையிழந்த பாவியே நடைப்பிணமே
தேய்ந்ததடா உன் வாழ்வு
சிதைந்ததடா உன் மனக் கோட்டை...

வறுமையாலே மாளாத துயரால்
வாடுகிறாய் நீ இந்நாள் உலகிலே
காசில்லையானால் உறவேதும் இல்லையே
மோசமடா மோசமடா......(வறுமை)

மாடியிலே நீ வாழ்ந்தாய் ஆயினும்
வீதியிலே நாய் போலே ஏங்கியே
வாடுகிறாய் நிலை தாழ்ந்தால் வாழ்க்கையே
மோசமடா மோசமடா.....(வறுமை)

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.