Maapilai Rakasiyam Sollava Lyrics
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா பாடல் வரிகள்
Last Updated: Jun 04, 2023
Movie Name
Arangetram (1973) (அரங்கேற்றம்)
Music
V. Kumar
Year
1973
Singers
L. R. Eswari
Lyrics
Kannadasan
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
ஆசையிலே இவர் பூனை........ நான்
அறிந்தே சொன்னேன்டி மானே......... (மாப்பிள்ளை)
சத்திர சோத்துக்கு காத்திருப்பார் இவர் காத்திருப்பார்
பிறர் சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார்
மாலையில் குளிக்கும் மைனரடி இவர்
மனதுக்கு கிழவியும் குமரியடி குமரியடி (மாப்பிள்ளை)
மாப்பிள்ளை படித்தது வேதமடி அவர்
மனதில் இருப்பது பூதமடி
உதட்டில் புன்னைகை வேஷமடி நான்
உள்ளதை சொன்னால் ரோஷமடி ரோஷமடி (மாப்பிள்ளை)
கோடியில் இவரும் ஒருவரடி ஒருவரடி
தெருக்கோடியில் உலவும் ரசிகரடி
ஜாடையில் இவரும் ராமனடி
செய்யும் சரசத்தில் கண்ணனின் பேரனடி பேரனடி (மாப்பிள்ளை)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.