Moothaval Nee Lyrics
மூத்தவள் நீ கொடுத்தாய் பாடல் வரிகள்
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
தமிழே.............
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
மேகத்தால் மழை பொழியும் மேகத்துக்கு லாபமென்ன
தியாகத்தால் எமை வளர்த்த தெய்வம் கண்ட லாபமென்ன (மூத்தவள்)
தன்னையே தேய்த்துத் தரும் சந்தனம் உந்தன் உள்ளம்
மண்ணிலே ஒருவரில்லை மங்கை உனக்கீடு சொல்ல
என்னவோ நீ கிடைத்தாய் எல்லோர்க்கும் வாழ்வு தர
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
ஆணாக பிறந்திருந்தால் ராஜாங்கம் உனது கையில்
பெண்ணாக பிறந்து விட்டாய் நாங்கள்தான் உன் மடியில்
தன்மானம் காப்பவள் நீ சன்மானம் யார் தருவார்
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவும் இல்லை
எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு கண்டாய்
கண்மூடும் வேளையிலும் எம்மைதான் கனவு கண்டாய் (மூத்தவள்)
இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.