காட்டுக்குள்ளே திருவிழா பாடல் வரிகள்

Last Updated: Mar 27, 2023

Movie Name
Thaai Sollai Thattadhe (1961) (தாய் சொல்லைத் தட்டாதே)
Music
K. V. Mahadevan
Year
1961
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்சலசலக்கும் அருவியக்கா மலையிலே தாவி
சதிராட்டம் போடுகிறாள் தரையிலே
சலசலக்கும் அருவியக்கா மலையிலே தாவி
சதிராட்டம் போடுகிறாள் தரையிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே
கலகலக்கும் இயற்கையம்மா மடியிலே அவள்
கண்மயங்கி ஓடுகின்றாள் வழியிலே அவள்
கண்மயங்கி ஓடுகின்றாள் வழியிலே

காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்

தென்றலெனும் குதிரையிலே ஊர்வலமாம் மான்கள்
சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம்
தென்றலெனும் குதிரையிலே ஊர்வலமாம் மான்கள்
சீர்வரிசை தாங்கி வரும் வாகனமாம்
மங்களமாய் மூங்கிலிலே நாயனமாம்
மங்களமாய் மூங்கிலிலே நாயனமாம் பச்சை
வாழையுடன் மாவிலையும் தோரணமாம் பச்சை
வாழையுடன் மாவிலையும் தோரணமாம்

காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்

வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா அங்கே
வந்தவரை அமர்கவென்பாள் கிளியம்மா
வாசலிலே வருகவென்பாள் குயிலம்மா அங்கே
வந்தவரை அமர்கவென்பாள் கிளியம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா
ஆசையுடன் நடமிடுவாள் மயிலம்மா இந்த
அழகு கண்டால் தூக்கம் கூடத் தோன்றுமா? இந்த
அழகு கண்டால் தூக்கம் கூடத் தோன்றுமா?

காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்
ஓஹோஹோ ஹோய்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.