Aadumadi Thottil Lyrics
ஆடுமடி தொட்டில் பாடல் வரிகள்
Last Updated: Oct 01, 2023
Movie Name
Aval Oru Thodar Kathai (1974) (அவள் ஒரு தொடர் கதை)
Music
M. S. Viswanathan
Year
1974
Singers
P. Susheela
Lyrics
Kannadasan
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனாள் ஆ ஆ
ஆதரித்தால் தென்மதுரை மீனாள்
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனாள் ஆ ஆ
ஆதரித்தால் தென்மதுரை மீனாள்
தேடுதடி என் விழிகள் செல்லக்கிளி ஒன்று
சிந்தையிலே நான் வளர்த்த கன்று
உன் வயிற்றில் பூத்ததடி இன்று
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனாள் ஆ ஆ
ஆதரித்தால் தென்மதுரை மீனாள்
மந்திரத்தில் மயங்குகிறாள் சந்தனத்தைப் பூசு
மல்லிகைப்பூ விசிறி கொண்டு வீசு அவள்
மணவாளன் கதைகளையே பேசு
வெற்றி மகள் கையிரண்டை பற்றிவிட்டான் திருடன்
நெற்றியிலும் திலகமிட்டான் நீர் ஆடும் கண்ணன் அவள்
நெஞ்சினிலும் திலகமிட்டான் காதலிலே மன்னன்
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனாள் ஆ
ஆதரித்தாள் தென்மதுரை மீனாள்
கண்ணம்மா என்றழைக்கும் பாரதியின் பாட்டு
கவிதையிலே நான் ரசித்தேன் கேட்டு அதைக்
கண்ணெதிரே நீ எனக்கு காட்டு
ஐயனுடன் கோயில் கொண்டாள் திருமகளாம் தங்கை
அடிவாரம் தனில் இருந்தாள் அலமேலு மங்கை அவள்
அன்பு மட்டும் போதுமென்று நின்று விட்டால் அங்கே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.