Song lyrics

Kalaimagal Kaipidi Lyrics

கலைமகள் கைபிடி பாடல் வரிகள்

Last updated Oct 06, 2026

Music
K. V. Mahadevan
Year
1972
Singers
P. Susheela
Lyricist
Kannadasan
Kalaimagal Kaipidi

Video

Kalaimagal Kaipidi

Lyrics

Kalaimagal Kaipidi Lyrics

கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும் விரல் இல்லையோ

கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையோ

உன்னிடம் ஆயிரம் ராகங்களே
என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே
உன்னிடம் ஆயிரம் ராகங்களே
என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே

இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன்

கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையோ

நான் யார் உன்னை மீட்ட
வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட
நான் யார் உன்னை மீட்ட
வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட

ஏனோ துடிக்கின்றேன்
ஏனோ துடிக்கின்றேன்
அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும் விரல் இல்லையோ

கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையோ

சொர்க்கமும் நரகமும் நம் வசமே
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சொர்க்கமும் நரகமும் நம் வசமே
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே

சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே
சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே
இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே

கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும் விரல் இல்லையோ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people