கண் மூடும் வேளையிலும் பாடல் வரிகள்

Last Updated: Apr 01, 2023

Movie Name
Mahadhevi (1957) (மகாதேவி)
Music
Viswanathan Ramamoorthy
Year
1957
Singers
A. M. Rajah, P. Susheela
Lyrics
Kannadasan
கண் மூடும் வேளையிலும்
கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின்
விலை இந்த உலகே

மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழை போல்
சொல்லாமல் கொள்ளாமல் வந்தது ஏன் சிலையே

கண் மூடும்.... கண் மூடும் வேளையிலும்
கலை கண்டு மகிழும்
கண்ணாளன் கற்பனையின் விலை இந்த உலகே

தென்பாங்கின் எழிலோடு பொழிகின்ற அழகா
சிந்தாமல் சிதையாமல் கண் கொள்ள வந்தேன்
சின்ன சின்ன சிட்டு போல
வண்ணம் மின்னும் மேனி
கண்டு கண்டு நின்று நின்று
கொண்ட இன்பம் கோடி

கண் மூடும் வேளையிலும்
கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின்
விலை இந்த உலகே


பண் பாடும் நெறியோடு
வளர்கின்ற உறவில்
அன்பாகும் துணையாலே
பொன் வண்ணம் தோன்றும்
எண்ணி எண்ணி பார்க்கும் போதும்
இன்ப ராகம் பாடும்
கொஞ்ச நேரம் பிரிந்த போதும்
எங்கே என்று தேடும் 

கண் மூடும் வேளையிலும்
கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின்
விலை இந்த உலகே

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.