தாயத்து தாயத்து பாடல் வரிகள்

Last Updated: Jun 07, 2023

Movie Name
Mahadhevi (1957) (மகாதேவி)
Music
Viswanathan Ramamoorthy
Year
1957
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
தாயத்து தாயத்து -
பலர் சந்தேகம் தீர்ந்துவிட சந்தோஷமான ஒரு
சங்கதியை சொல்ல வரும் தாயத்து -
சில சண்டாளர் வேலைகளை ஜனங்களின் மத்தியிலே
தண்டோரா போட வரும் தாயத்து
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து

தில்லில்லா மனுஷன் பல்லெல்லாம் நெல்லாருக்கு
சொல்லெல்லாம் விஷமிருக்கு கேளுங்கோ -
இத நெல்லாக்கி பொல்லாக்கி அல்ல நடுவேராக்கி
எல்லாம் வெலக்கிப்போடும் பாருங்கோ லேலோ
தாயத்து தாயத்து ஆவோ
தாயத்து தாயத்து

பொம்பளைங்க பித்துக்கொண்ட புடவை பக்தர்களுக்கு
புத்தியை புகட்ட வந்த தாயத்து -
செம்பு தகட்டை பிரிச்ச திரையில் மறஞ்சிருந்து
சேதிகளை சொல்லும் இந்த தாயத்து


அய்யா , இதிலே வசியம் பண்ற வேலையிருக்கா ?
மந்திரம் வசியமில்லை மாயாஜால வேலையில்லை
வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப அவசியம் -
இதில் மறஞ்சிருக்கு அரிய பெரிய ரகசியம்
தாயத்து தாயத்து
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து

ஏம்பா , பணம் வருமானத்துக்கு ஏதாவது வழி இருக்கா ?
உடம்பை வளைச்சு நல்ல உழச்சுப்பாரு அதில்
உனக்கும் உலகத்துக்கும் நன்மையிருக்கு
உட்காந்திருந்துகிட்டு சேர்க்கிற பணத்துக்கு
ஆபத்து இருக்கு அது உனக்கெதுக்கு
தாயத்து தாயத்து
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து

ஏயா , இதிலே பொம்பளைகளை மயக்க முடியுமா ?
கண்ணும் கருத்துமே பெண்ணை கவர்ந்திடும்
காதலும் வாழ்வும் தொடர்ந்திடும்
கண்ட கண்ட பக்கம் திரிஞ்ச கையும் காலும் வாழ்வும்
துண்டு துண்டாகத் தொங்கும்படி நேர்ந்திடும்
தம்பி , அதெல்லாம் செய்யாது இது வேற
தாயத்து தாயத்து
அய்யா தாயத்து தாயத்து
அம்மா தாயத்து தாயத்து

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.