வாராய் என் தோழி பாடல் வரிகள்

Movie Name
Paasamalar (1961) (பாசமலர்)
Music
M. S. Viswanathan
Year
1961
Singers
L. R. Eswari
Lyrics
Kannadasan
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?
மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ?
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?

மணக்கோலம் கொண்ட மகளே புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே நம் குலம் வாழப் பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ?
சிரிக்காத வாயும் சிரிக்காதோ திருநாளைக் கண்டு மகிழாதோ?

வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ?

தனியாகக் காண வருவார் இவள் தளிர்போல தாவி அணைவாள்
கண்போல சேர்ந்து மகிழ்வாள் இரு கண் மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ?
எழிலான கூந்தல் கலையாதோ இதமான இன்பம் மலராதோ?

வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ

மலராத பெண்மை மலரும் முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும் முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ?
இரவோடு நெஞ்சம் உருகாதோ இரண்டோடு மூன்றும் வளராதோ?

வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும் திருநாளைக் காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.